அரசியல் பிரசாரம் குறித்து அதிருப்தியில் பேராயர்!!
அவரது அனுமதியும் விருப்பமும் இன்றி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை அரசியல்வாதியொருவர் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பேராயர் பதவியை அல்லது தன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபடுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போதும் பிரசார கையேடுகளிலும் எனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறித்த வேட்பாளர்கள் ஆரம்பத்தில் என்னை சந்திப்பதற்காக வருகை தந்த போது என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையே இவ்வாறு பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் என்னுடைய அனுமதியையோ அல்லது விருப்பத்தினையோ இவர் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் என்னை அல்லது பேராயர் பதவியை எவ்வித அரசியல் கட்சி அல்லது அரசியல் குழுவுடன் கட்சி அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்பதையும் தெளிவாகக் கூறுகின்றேன் என்வும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
தமது மனசாட்சியின் பிரகாரம் தாம் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் காணப்படுகிறதாக கூறிய பேராயர்,
இந்த ஜனநாயக உரிமையை எதற்காகவும் நீக்கிக் கொள்ளத் தேவையில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo