முல்லைத்தீவு விமானப்படை இராணுவத்தினர் மீது தாக்குதல்!!
நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பாதுகாப்பு நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்றபோது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இதன்போது காயமடைந்த 35 அகவையுடைய விமான்படையினனர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து முள்ளியவளை பொலீசார் விமானப்படையினன் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo