இன்று மின்கட்டண நிவாரண குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு!!

மின்பட்டியலுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  வைரஸ் தொற்று பரவலிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைத்தனர். அவற்றை ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவின் அறிக்கை அதன் தலைவரான மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் மூலம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். மின்பட்டியலுக்கு நிவாரணம் வழங்ககூடிய பல்வேறு பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.