சடலங்களால் விமானநிலையத்தில் குழப்பம்!

வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒன்று மாறி தகனம் செய்யப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிறுகிழமை குவைத் நாட்டில் இருந்து சீல் வைக்கப்பட்டு இந்த இரண்டு சடலங்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு சடலம் குவைத்தில் பணியாற்றிய நிலையில் வாகன விபத்தில் உயிரிழந்த ஆண் நபராகும்.
அந்த சடலம் நாவலப்பிட்டிய பிரதேச விலாசம் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய சடலம் குவைத் நாட்டில் இருதய நோயினால் உயிரிழந்த பெண்ணாகும்.
அந்த சடலம் நிக்கரவெட்டிய பிரதேச விகாரையின் தேரர் ஒருவரின் சகோதரி என குறிப்பிடப்படுகின்றது.
ஆணின் சடலத்தின் உரிமையாளர்களான நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர்கள், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனையிட்ட போது அந்த பெண்ணின் சடலம் என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேரந்த வந்த தேரர் ஆண் ஒருவரின் சடலத்தை கொண்டு சென்று நல்லடக்கம் செய்துள்ளார். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் தங்கள் உறவினர்களின் சடலமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் பெண்ணின் சடலத்தையே நல்லடக்கம் செய்யுமாறு நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதற்கு நாவலப்பிட்டிய குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டமையினால் அந்த பிரச்சினை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இன்று இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.