201 கிலோ கேரளகஞ்சா வவுனியாவில் கைப்பற்றல்!!
வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் 201 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழிலிருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த வாகனத்தை வவுனியா பறயநாலங்குளம் சந்தியிலுள்ள சோதனைச் சாவடியில் வழிமறித்த பொலிஸார், சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொறுப்பிலெடுத்த பொலிஸார் சாரதியைக் கைது செய்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




