சுனில் ஜயவர்தனவை கொலை செய்த 8 பேருக்கு விளக்கமறியல்!!
இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த 8 பேரையும் இம்மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி மிரிஹான பிரதேசத்தில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo