வெற்றியோ தோல்வியோ திரும்பவும் வீதியில் நின்று சிங்களஅரசிற்கு எதிராக யார் குரலெழுப்பப்போகிறார்கள்...?

தேர்தலில் தோற்றாலும் வென்றாலும் எவ்வித நெருக்கடிகளுமின்றி இருக்கப்போகிறவர்கள் கூட்டமைப்பினர் தான். இலங்கை அடக்குமுறை அரசின் ஒற்றையாட்சிக்குக் கீழ் நின்றபடி எங்ஙனம் நெளிவுசுழிவுகளை அனுசரித்துப்போகவேண்டுமென்று அக்குவேறு ஆணிவேறாக அறிந்தவர்கள் அவர்கள். மொட்டு, யானை, வீணை, எல்லாம் எனதுகணக்குப்படி சிங்கள அரசுதான். அதனால் அவர்கள் புளங்காகிதம் அடையத்தேவையில்லை.

இதில் சுமந்திரனுக்குத்தான் பளு அதிகம்.  சம்பந்தருக்கு Dubmash செய்யவேண்டும், ஜெனிவாவுக்கு ஓடி இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லவேண்டும். தமிழரசின் வெளிநாட்டுக் கிளைகளின் வரவுசெலவுகளைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.

சிறியர் எப்போது சுமந்திரன் இன்னொரு பாலா அண்ணை என்றாரோ, அன்றைக்கே அவர் பரலோகம் போய்விட்டார். கிளிநொச்சியில் மீசை நரைக்காத (உண்மை) ஒரெயொரு கூட்டமைப்பு இளைஞர் என்ற பெயர் அவருக்குக் கிடைக்கக்கூடும்.

"நான் டக்ளசை ஒட்டுக்குழு எண்டு சொல்லேல்லை"  என்று மாவை சாத்துவாய் ஊத்தியபோது கதிரை ஒன்றுக்காக எப்படியும் பாடலாம் என்று முடிவெடுத்துவிட்டார் என்பது தெரிந்தது.

சித்தார்த்தன் மற்றும் ஜனா இருவருக்கும் வீட்டுச்சின்னம் பொறித்த வெள்ளை Van கோத்தாவால் வழங்கப்படவாய்ப்புண்டு. இருவரும்  தொழிலநுபவம் மிக்கவர்கள் என்பதால்  அவர்கள் பழையதொழிலை ஆரம்பிப்பார்கள். எஞ்சி  இருப்பவர்களெல்லாம் தேர்தல்வரை கைகளே உயர்த்தியபடி அலைவார்கள் தவிர பின்னர் காண வாய்ப்பில்லை.

வெற்றியோ தோல்வியோ திரும்பவும் வீதியில் நின்று சிங்களஅரசிற்கு எதிராக யார் குரலெழுப்பப்போகிறார்கள்...?

வேறுயார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தான். வென்றாலும்  அவர்கள் "கதிரைகளில்" அமர்ந்திருக்க மாட்டார்கள். தோற்றாலும் வீடுகளில் முடங்கமாட்டார்கள்.
தமிழ்த்தேசியமே மூச்சென்று வாழ்பவர்க்கு, வெற்றி தோல்வி எல்லாம் வெறும் வாய்வார்த்தைதான்...

ஆக மக்கள் எதைக்கொடுத்தாலும், அவர்கள்தான் தொடர்ந்தும் போராடப்போகிறார்கள்..!

-தேவன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.