மாற்றத்தின் வழியில் கறையில்லா, தெளிவான சிந்தனை

இன்றைய வடக்கின் தேர்தல் களத்தில் நிற்கும் கறையில்லா, தெளிவான சிந்தனை கொண்ட ஒருத்தன் என்றால், அது மணிவண்ணனே. உரிய சரியான தருணத்தில் சந்தர்ப்பத்தை வழங்காது காலங் காலமாக தவறு செய்து வருகின்றோம்.

சரியாகச் செயற்படத் தெரியாதவனை, திரும்ப திரும்ப அனுப்பி என்ன தான் செய்யப் போகின்றோம். இழப்புக்கள், ஏமாற்றங்களைத் தவிர வேறு எதனையும் நாங்கள் இதுவரையில் பெற்றிருக்கவில்லை. இன்றைய எமது வாழும் சமுதாயமான இளைஞர், யுவதிகளை ஒரு நிலைக்கு கொண்டு செல்ல அவர்களைப் போன்ற ஒருவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் சாதிக்க முடியும்.

எமது தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. ஆனால், எவையுமே நிறைவேறவில்லை. இந்தநிலையை மாற்றியமைக்க வேண்டும். நாமும் ஒரு வெற்றிச் சமுதாயமாக மாற்றமடைய வேண்டும்.

ஏமாற்றுபவர்களையும், இயலாதவற்றை சொல்லி மறுகணம் மாற்றி பேசுபவர்களையும் புறந்தள்ளி,

இம்முறை மாற்றத்தின் வழியில் மணிவண்ணனை நாடாளுமன்றம் அனுப்பி பார்ப்போமா?

கு.சுரேன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.