தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது த.தே கூட்டமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய முன்னாள் எம்.பி மாவை சேனாதிராஜாவினால் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று முற்பகலில் நடந்தது.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன் உள்ளிட்ட வேட்பாளர்களும் அதேபோல கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo