விஜய்,சூர்யா குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா!!

தளபதி விஜய் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த டான்ஸர் என்பதும் அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவின் அனைத்து டான்ஸ் மாஸ்டர்களும் விஜய்யின் டான்ஸ் குறித்து அவ்வப்போது புகழ்ந்து வருவதை பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா தனது சமூக வலைத்தளத்தில் விஜய் குறித்து பதிவு செய்துள்ள ஒரு கருத்து தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது


விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, இந்த புகைப்படம் விஜய்யுடன் ’சர்க்கார்’ படத்தில் பணிபுரிந்த போது எடுத்தது என்றும், அவருடன் பல படங்களில் தான் பணி செய்து வந்ததாகவும், அவர் மிக ஒரு எளிமையான நபர் என்றும், அவர் அதிகம் பேச மாட்டார் ஆனால் அவரது நம்பிக்கை மிகுந்த முயற்சி மற்றும் கடினமான உழைப்பு பலரையும் பேசவைக்கும் என்றும் மிகவும் புத்திசாலித்தனமான அதே நேரத்தில் எளிமையான மனிதர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமும் பிருந்தாவின் இந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது


அதே போல் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ’சூர்யாவுடன் கஜினி, காக்க காக்க, ஆய்த எழுத்து, தானா சேர்ந்த கூட்டம் உள்பட ஒருசில படங்களில் பணிபுரிந்ததாகவும், நான் பார்த்த நடிகர்களில் எளிமையானவர் மட்டுமின்றி பெண்களுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர் என்றும் அவர் கூறினார்

தற்போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ’ஹேய் சினாமிகா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைத்ரி, காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.