பலத்த காற்று வீசியதில் வவுனியாவில் ஒருவர் காயம்!!
இதன்போது வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன், வவுனியா கொறவப்பொத்தான பிரதான வீதியில் நாலாம்கட்டை பகுதியில் நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளது.
இதன்போது அந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை கொறவப்பொத்தான வீதி றம்பைக்குளம் சந்திக்கு அண்மையில் முறிந்துவீழ்ந்த மற்றொரு மரத்தினால் அதன் கீழ் நின்றிருந்த ஒருவர் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் முறிந்து வீழ்ந்த மரங்களை அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் உடனடியாக அகற்றியிருந்தனர்.
குறித்த சம்பவத்தினால் வவுனியா கொறவப்பொத்தான வீதியூடான போக்குவரத்து சிலமணி நேரங்கள் பாதிக்கபப்ட்டிருந்தது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை