'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'தெறி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டி உள்பட ஒருசில இடங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அரசின் அனுமதி கிடைத்ததும் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் அர்ஜெய் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை நடிகர் அர்ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் ‘தெறி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘பாயும் புலி’ மற்றும் பிரபுதேவாவின் ‘தேவி 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க கிடைக்க வாய்ப்பு பொன்னான வாய்ப்பு என்றும், இயக்குனர் சிவா அவர்கள் இந்த வாய்ப்பை தந்ததற்கு மிகவும் நன்றி என்றும் அர்ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.