மட்டு. அம்பாறையில் ஓங்கி ஒலித்தது சுகாசின் குரல்!!

மட்டு,அம்பாறை மக்களின் வரவேற்பில் திணறிய மக்கள் முன்னணி விடுதலைப் போராளிகள், எட்டுத்திக்கும் எதிரிப்படைகள், சென்ற இடமெல்லாம் சிறிலங்காவின் அடிவருடிகளும் துரோகிகளும், கொண்ட இலட்சியம் குன்றிடாத மக்கள் முன்னணியின் விடுதலைப் பேரொளிகள் எதற்கும் அஞ்சாமல் வீரமுரசறைந்தனர். மட்டுநகர் வீதியிலே ஒட்டுக்குழுக்களால் கொன்று வீசப்பட்ட ஊடகவியலாளர் , நாட்டுப்பற்றாளர், ஐயாத்துரை நடேசன் அவர்களின் மருமகன் சுகாஸ் மக்கள் முன் வீராவேசத்துடன் உரையாற்றினார். எதற்கும் அஞ்சாத வேங்கைகள் இவர்கள் என்பதை தென்தமிழீழம் மீண்டும் இன்று கண்டது. மட்டு, பண்டாரவெளி, கொக்கட்டிச்சோலை, மன்னாவெளி, வவுணதீவு , முனைக்காடு, ஆகிய இடங்களில் விடுதலை எழுச்சி பரப்புரை இன்று நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின்னர் தேசியத்தலைவரின் பிள்ளைகளைக் கண்டோம் என மக்கள் கண்ணீர் மல்கக் கூறினர், எந்த நிலை வரினும் எமது உரிமைகளை விட மாட்டோம் என மக்கள் உறுதியுடன் முழக்கமிட்டனர்.

Blogger இயக்குவது.