15 வயது சிறுமிக்கு கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில் திருமணம்!!

நள்ளிரவில் 15 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


வேலூர் அருகே காட்பாடி கழிஞ்சனூர் என்ற பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி நேற்று இரவு தனது பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய கை கால்களை கட்டிவிட்டு வலுக்கட்டாயமாக இரவு 11 மணி அளவில் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதன் பிறகு காலை விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தற்போது அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது. தற்போது அந்த சிறுமி அவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சிறுமி மட்டுமன்றி வேலூர் மாவட்டத்தில் மேலும் மூன்று சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடத்த ஏற்பாடு நடந்து வந்ததாகவும் இதுகுறித்த ரகசிய தகவல் வெளிவந்ததை அடுத்து காவல்துறையினர் தக்க நேரத்தில் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

15 வயது சிறுமியை கை கால்களை கட்டி போட்டு கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.