வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் முன்னணி ஆதரவுடன் சிரமதானப்பணி📷

தடைகளைத்தாண்டியும் தடம்பதிப்போம் முன்னணியாய் தமிழர்தம் அடையாளங் களைப்பாதுகாப்பதற்காய்.

வவுனியா வடக்கு ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டதான சிரமதான ஆரம்பநாள் பணிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவும் கலைபண்பாட்டுத் துறையும் கிராம பொதுமக்கள் இளைஞர்களது பங்களிப்புடன் இன்றைய நாளில் இணைந்து பணியாற்றியது. மேற்படி ஆலய சிரமதான நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.செல்வராஜா_கஜேந்திரன் கலந்து கொண்டு மேற்படி சிரமதானநிகழ்வை பொதுமக்களுடன் இணைந்து ஆரம்பித்துவைத்தார்.


வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தையும் இதைப்போன்ற அடையாளங்களையும்,தொன்மங்களையும், மரபுசார் இடங்களையும், நிலங்களையும் பாதுகாக்க முன்னணி தொடர்ந்தும் மக்களோடு இணைந்து போராடும்.

Blogger இயக்குவது.