மக்கள் முன்னணிக்கு தேசியப்பட்டியல் ஊடாக 2 ஆவது ஆசனம்!!

நடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குவீதத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று அக்கட்சி ஏற்கனவே ஒரு ஆசனத்தை  கைப்பற்றி இருந்த நிலையில் தேசியப்பட்டியலில் கிடைக்கப் பெற்ற ஆசனத்துடன்  முன்னணியின் ஆசன எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


Powered by Blogger.