யாழ். மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் முன்னிலை வகிப்போர்!

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியால் மூன்று ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய நான்கு ஆசனங்கள் நான்கு கட்சிகளுக்கிடையில் பகிரப்படுகின்றன.

இதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளன.

இதில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 31,658 வாக்குளைப் பெற்றுள்ளார். அதேபோல், செ.கஜேந்திரனுக்கு 24,794 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 22,741 வாக்குகளும் சுகாஸிற்கு 21,467 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில், சி.வி.விக்னேஸ்வரன் 21,554 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன், அருந்தவபாலன்  12,674 வாக்குகளைப் பெற்றுள்ளனர். அத்துடன், சிவாஜிலிங்கம் 10,123 வாக்குகளையும் சுரேஸ் பிரமச்சந்திரன் 7,154 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில், டக்ளஸ் தேவானந்தா 32,146 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனைவிட, றெமீடியஸ்  10,780 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதனைவிட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் யாழ். தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர், 36,356 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


Blogger இயக்குவது.