கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் நியமனம்!!

 


கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி  வௌியிப்பட்டுள்ளது.

இந்த செயலணியில், மல்வத்து – அஸ்கிரிய பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர் மற்றும் அம்பன்வெல்லே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் ஏற்கனவே 12 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த நால்வரையும் இணைத்து அந்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் இந்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழர்கள் ஒருவர்கூட உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.