கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கோடீஸ்வர யாசகர்

கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கோடீஸ்வர யாசகர்

கொழும்பில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாகசர் கோடீஸ்வரர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 


மஹரகம பமுனுவ பகுதியை சேர்ந்த 64 வயதான நபர்  கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் யாசகம்  எடுத்தபோது கைது செய்யப்பட்டார் . 


குறித்த நபருக்கு இரண்டு மாடியில் சொகுசு பங்களா மற்றும் மூன்று ஆடம்பர கார்களான வேகன் ஆர் மோட்டார் வாகனம் ஒன்றும் மேலும் இரண்டு சொகுசு மோட்டார்

 (Wagonr hybrid car and another luxury car) உள்ளமை  பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . 


கைது செய்யப்பட்ட யாசகர் தனது வீட்டின் மேல் மாடியை மாதம் 30 ஆயிரம் ரூபாவுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கியுள்ளார் . யாசகம்  எடுப்பதன் மூலம் தினமும் 5000 ரூபா பணம் அவர் சம்பாதிப்பதாக பொலிஸ் விசாரைணையில் தெரியவந்துள்ளது .


கொழும்பு ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் , குறித்த யாசகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் . இதன்போது மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கோடீஸ்வரர் என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது .

Blogger இயக்குவது.