வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா.


டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர்  வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து சுய-தனிமைப்படுத்தப்பட்ட  கர்ப்பிணிப் பெண்ணிற்கு  கொரோனா வைரஸால் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.


 சிலாபம்- ஆராய்ச்சி கட்டுவ பகுதியில் வசிக்கும் இந்த  பெண்ணிற்கே கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சிலாபம் மருத்துவமனையின் பணிப்பாளர்   தெரிவித்துள்ளார்.


சிலாபம் மருத்துவமனையில் இந்தப் பெண்ணுக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் வைரஸ் பாதித்திருப்பது தெரியவந்தது.


 இதையடுத்து கர்ப்பிணி  பெண் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிலபம் மருத்துவமனையின் பணியாளர் தெரிவித்தார்.

Powered by Blogger.