ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து!

ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் எமிரேட்ஸில் உள்ள ஈரானிய சூக்கில் (Iranian Souq) இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படும் நிலையில் பாரிய தீ பரவலாக இது மாறியுள்ளது.

இந்நிலையில், அஜ்மன் சிறப்பு மருத்துவமனை மற்றும் தொழில்துறை பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு அருகில் தீ பாரிய அளவில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜ்மன் சிறப்பு மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தைத் தொகுதியில், டசின் கணக்கான வர்த்தக நிலையங்கள் உள்ள நிலையில், பாரிய தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்பதுடன் இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயமடைந்தமை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.