தினமும் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?


பச்சை மிளகாயை தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். தினமும் பச்சை மிளகாய் சமையலில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான வெப்பத்தினை தருகிறது.


உடலில் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்கிறது. பச்சை மிளகாய் கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் பச்சை மிளகாயில் அதிகளவில் நிறைந்துள்ளது.


பச்சை மிளகாயின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்


வைட்டமின்கள்


நாம் பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரந்து இதனால் உணவு எளிதில் ஜீரணமாகி, விட்டமின் சி சத்துக்கள் அதிகம் நமக்கு கிடைக்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தி


தினமும் பச்சை மிளகாயை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

தினமும் பச்சை மிளகாயை சாப்பிட்டால் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இதய துடிப்பும், இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

இரும்புச் சத்து


பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவி செய்கிறது.

சர்க்கரை நோய் கட்டுப்படுத்த


தினமும் பச்சை மிளகாயை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.

பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டம் பாய்ந்து தலை முடி உதிர்வதை தடுக்கும்.

சரும பிரச்சினை தீர


பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி செய்கிறது. அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெற்று விடலாம்.

பச்சை மிளகாயை சாப்பிட்டால் பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளதால் சரும தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

ரத்தம் ஓட்டம் சீராக


பச்சை மிளகாய் தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்.

தோல் பிரச்சினை நீங்க


தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க பிச்சை மிளகாய் சிறந்தது.

வாயு தொல்லை நீங்க


பக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டுகிறது. ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகின்றன.

தொண்டை கரகரப்பு சரியாக


சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாக செயல்படுகிறது.

மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு பச்சை மிளகாய் மிகவும் உதவி செய்கிறது. வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாகவும் பச்சை மிளகாய் பயன்படுகின்றன.

நோய் விரட்டியடிக்க


இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது.

சருமம்


பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி தண்ணீரில் கரையக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களை உருவாக்கும். இதனால் கொலாஜன் வேதிப்பொருளை சுரக்க உதவி செய்யும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கொலாஜன் என்ற வேதிப்பொருள் மிகவும் முக்கியம். அவை பச்சை மிளகாயில் உள்ளது.

தலைமுடி


பச்சை மிளகாயில் இயற்கையாகவே இருக்கும் சிலிக்கான் சத்து தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடியின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஃபோலிக்கல்ஸ் மற்றும் டெஸ்ட்டோஸ்டிரோன் வளர்ச்சியும் அதிகரிப்பதால் நரை முடி வருவது தவிர்க்கலாம்.

எடை குறைப்பு


பச்சை மிளகாயில் சுத்தமாக கலோரி இல்லை என்பதாலும், நம் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதாலும் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக பச்சை மிளகாய் கொழுப்பை குறைக்கும்.

பார்வை


பச்சை மிளகாயில் விட்டமின் ஏ இருக்கிறது.இவை கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது. ஐந்து வயதிற்கு மேற்ப்பட்ட எந்த வயதினரும் பச்சை மிளகாயை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

எலும்பு


பச்சை மிளகாயில் அதிகப்படியான கால்சியம் மற்றும் விட்டமின் கே இருக்கும். இவை எடுத்துக் கொள்வதால் காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறுவது தவிர்க்கலாம். அதாவது ரத்தம் சீக்கிரம் உறைந்திடும். அதே நேரத்தில் எலும்புகளுக்கு வலு அளிக்கும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.