வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் மலேசியா தடை நீடிப்பு

 


மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா செல்வதற்கு டிசம்பர் 31 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் பிற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதாக மலேசிய பிரதமா் முஹைதீன் யாசின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.