ஒக்லாந்தில் நடைமுறையில் உள்ள முடக்கநிலை நீடிப்பு!

 

நியூஸிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில், நடைமுறையில் உள்ள தற்போதைய முடக்கநிலை எச்சரிக்கை நிலை-3, ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடரும் என பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

நாளை மறுதினம் புதன்கிழமையுடன் நிறைவுக்கு வரவிருந்த கட்டுப்பாடுகள், மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘ஏற்கனவே, ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை ஒக்லாந்து நகரம் எச்சரிக்கை நிலை 3இல் இருக்கின்றது. பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழி மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் பிற பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை 2இல் உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

எச்சரிக்கை நிலை 3இன் கீழ், வணிக நிறுவனங்கள் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

ஒக்லாந்தில் சமூகத் தொற்று உள்ளதா என்பதை மறுஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு திங்கட்கிழமை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், எச்சரிக்கை நிலை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட இடங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

பொதுப் போக்குவரத்தில் விமானங்கள், பேருந்துகள், வாடகை கார்கள் என அனைத்தும் அடங்கும். குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இந்த விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வரும்’ என கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.