கிம் ஜோங் உன் கோமா நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்!

 

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், கோமா நிலையில் இருப்பதாக தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சோங் மின் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தமது பொறுப்புகளில் சிலவற்றை தனது சகோதரிக்கு பகிர்ந்து அளித்ததாக வெளியான செய்திக்கு பிறகு, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சாங் சோங் மின் கூறுகையில், ‘கிம் ஜோங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும். தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜோங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார், ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மொத்தமாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு தெளிவான திட்டத்தை இதுவரை வடகொரியா உருவாக்கவில்லை.

ஆட்சியில் வெற்றிடம் தென்ப கூடாது என்பதாலையே, அவரது சகோதரி கிம் யோ ஜாங் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். சமீபத்திய மாதங்களில் வட கொரிய ஊடகங்கள் வெளியிட்ட கிம் ஜோங் உன்னின் புகைப்படங்கள் போலியானவை’ என கூறினார்.

36 வயதான கிம் ஜாங், இந்த ஆண்டில் இதுவரை சில முறை மட்டுமே, பொது இடங்களில் தென்பட்டார். முன்னதாக அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், தலைநகரில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சூச்சோன் பகுதியில் கிம் ஒரு தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மொத்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.