ரணில் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைக்கும் சுஜீவ!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியை சிதைத்துவிட்டு ஆளும் தரப்பின் ஆதரவிலேயே வாழ்ந்து வருகிறாரென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சுஜீவ சேனசிங்க மேலும் கூறியுள்ளதாவது,  “ஒவ்வொரு முறை தேர்தலிலும் கட்சி தோல்வியடையும்போது, புதிதாக சிந்திப்போம் என கூறி ரணில் எங்களை உற்சாகப்படுத்துவார்.

இவ்வாறு கூறிதான், முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவை தோல்வியடையச் செய்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவை வெற்றிப் பெறச் செய்தார்.

இவ்வாறு கட்சிக்கு தோல்வியைப் பெற்றுக்கொடுத்து, ஆளும் தரப்பின் ஆதரவில் வாழந்து வருகின்றார்.

எனவே இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், மக்கள் சிந்தித்து உரியவருக்கு தங்களின் வாக்குகளை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.