கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் தந்தையார் சாவடைந்தார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்களின் தந்தையான கணபதிப்பிள்ளை துரைசிங்கம் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்கும்பான் மேற்கு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முட்கொம்பனில் வசித்து வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 10 திகதி பிறந்த துரைசிங்களம் புஸ்பகலா என்னும் இயற்பெயருடைய அங்கயற்கண்ணி 1994 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 16 ஆம் திகதி அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் கப்பல் மீதும், டோறா விசைப் படகு மீதும் நடத்திய கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.