கவலைக்கிடமாக இருந்த காதலன்- காதலி எடுத்த அதிரடி முடிவு!!

 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வாலிபர் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவரது காதலி எடுத்த அதிரடி முடிவு காரணமாக கொரோனாவில் இருந்து அந்த வாலிபர் குணமான அதிசயம் மருத்துவர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்த சான் ஆண்டனியோ என்ற பகுதியை சேர்ந்தவர் கார்லோஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த கிரேஸ் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்த நிலையில் திடீரென கார்லோஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் கார்லோஸ் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த காதலி கிரேஸ் ஒரு அதிரடி முடிவு எடுத்தார்.  கார்லோஸ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார் 

மருத்துவர்களின் அனுமதியைப் பெற்று கார்லோஸ்-கிரேஸ் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு முகக்கவசம் அணிந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு சிலமணி நேரத்துக்கு முன்பு வரை கவலைக்கிடமாக இருந்த கார்லோஸ், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் முடிந்த மறுதினமே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பின் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனாக அவர் ஒரே வாரத்தில் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

கார்லோஸ் கொரோனா நோயிலிருந்து குணமடைய அவரது காதல் தான் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் முழுமையாக நம்புகின்றனர். கொரோனாவை ஒரு உண்மையான காதல் வென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உண்மைக்காதல் கொரோனாவையும் ஜெயிக்கும்.. நிரூபித்துக் காட்டிய காதலர்கள்.. ஒரு நெகிழ்ச்சித் தருணம்! https://t.co/oIop6GbnqR #america #wedding

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.