எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்காக பிரார்த்தனை!

 

கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வரும் பிரபல பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி நாளை மாலை அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ். சந்திர சேகர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், எஸ். பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் மருத்துவர்களை மிஞ்சிய சக்தி இறைசக்தி என்பதால் இறைவனை நோக்கி அனைவரும் நாளை பிரார்த்தனை நடத்தினால் எஸ்.பி.பி குணமாகி திரும்புவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.