எஸ்பிபி வீடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!!

 


பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திரைஉலகினர் மட்டுமின்றி லட்சக்கணக்கான ரசிகர்கள் என உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த இசை ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அவர் பாடிய பாடல்களையும் ஒலிக்க வைத்து மெழுகு வர்த்தியை கையில் ஏந்தி அவரது புகைப்படத்தை வைத்து கொண்டு ஏராளமானனோர் பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்பிபி மூச்சுவிடாமல் பாடிய பாடலின் வீடியோவை பதிவு செய்து ’இப்படி பாட உங்களால் மட்டுமே முடியும், சீக்கிரம் எழுந்து வாருங்கள் எஸ்பிபி சார், உங்களுக்காக காத்திருக்கின்றோம்’ என்று பதிவு செய்துள்ளார்

’கேளடி கண்மணி’ என்ற படத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் நடித்ததோடு அந்த படத்தில் ஒரு பாடலின் சரணம் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Blogger இயக்குவது.