ஆதியந்தம்.......கவிதை!!

 

விதை முளைத்துக்

கன்றாகி நின்றதிலே
காலம் கனிந்து பல
நாள் செல்ல வளருமதே...
பல்கிளையில்
அரும்பதுவும் துளிராகும்...
துளிரும் இலை இலையாய்
கிளையதிலே உறவாடும்...
அங்கு உறவாடும்
இலையதுவும் நிலையில்லை...
காலம் பின் செல்ல பின்செல்ல கிளையுமில்லை...
வேராலே நின்ற
மரம் தனைமறந்தே
துளிரும் இலையோடு
கதைசொன்னால் நம்பிடுமா...?
பட்டவலி
#வேரிங்கு சொன்னாலும்
கிளையில் நின்றாடும்
#பூங்குருவி உணராதே...
பல்கிளையில்
பூங்குருவி எக்கிளையில்...?
மண்ணின் அடியோடும்
வேரதுவும் அறியாதே...
விதிபோலே
விதையொன்று உருவாகும்
மீண்டும் மண்ணதிலே
சென்றதுதான் கன்றாகும்...
கன்றதுவும்
காலத்தால் மரமாகும்...
மீண்டும் நான்சொன்ன
இக்கதைதான் பூப்பூக்கும்...
மீண்டும் நான்சொன்ன
#இக்கதைதான் பூப்பூக்கும்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.