எங்கள் வாக்கு யாருக்கு!!

நம்மை படித்த சமூகம் என எம்மை நாமே   சொல்லும் நாம், யாருக்கு வாக்கு போடபோகின்றோம் தேர்தல் 2020ல், 

1. இனவாதக்கட்சிகள் எங்களின் இந்த அவல நிலைக்கு இவர்கள்தான் காரணம், இவர்கள் சோறு தருவார்கள் ஆனால் உரிமை பற்றி பேச மாட்டார்கள், இவர்களுக்கு தமிழனுக்கு பிறந்த யாரும் போட மாட்டார்கள்.


2. துரோக கட்சிகள் - இவர்களுக்கும் மேற்சொன்னவர்களுக்கும் வித்தியசம் இல்லை. அவர்களின் வேலைகாரர்கள்


3. தமிழ் தேசிய கட்சிகள்


1. TNA- தமிழர்களின் பிரச்சினையை ஒருவரின் கையில் கொடுத்துவிட்டு, தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டு, தமிழர்களின் தேசிய பிரச்சினையை 85 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி போல கொழும்புடன் முடிக்க நினைக்கும் பேரினவாத கட்சிகளின் அடிவருடிகள்


2. விக்கி அணி ஐயாவுக்கு தமிழர்களின் தேசியப் பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல்கள் இல்லாமல் இப்பொழுதுதான் தமிழர்களுக்கு என்ன நடந்தது என அறிய முயற்சி செய்யும்,  அத்தோடு தமிழர்களின் தேசிய பிரச்சினை 90 ஆம் ஆண்டு காலப்பகுதி போன்று இந்தியாவுடன்  முடிக்க நினைக்கின்ற  விக்கி ஐயா அணிக்கா?


3. கஜேந்திரகுமார் அணி - 2002 ஒஸ்லோ  ஒப்பந்தத்துடன் சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழர்கள் பிரச்சனையை அதிலிருந்தே தொடர்கின்ற கஜேந்திரகுமார் அணிக்கா?


வாக்குச்சாவடியில் வாக்கு போட முன்னர் உங்களுக்காக  கந்தகம் சுமந்த் அவர்களை ஒரு கனம்  நினைவில் நிறுத்தி வாக்கை செலுத்துங்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.