நாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதி வெளியானது!

 

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் எதிர்வரும்  27 மற்றும் 28ஆம்  திகதிகளில்  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு நாளைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக  நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் வரையான காலப்பகுதிக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புப் பற்றிய நிலையியற் கட்டளை இலக்கம்27ற்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தெரியப்படுத்தவும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை நிலையியற் கட்டளை 27 (2)இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நாளை  நாடாளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.