மீசாலையில் தீயில் கருகிய 10 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள்: கடை எரிந்து நாசம்
யாழ்.தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள தொலைபேசி சாதன வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 10இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கே தீபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கருத்துகள் இல்லை