தியாக யாத்திரையின் முதல் நாள் இன்று...!


தமிழ் இனம் சுதந்திரமாய் 
சுவாசிக்க - தன் 
சுவாசம் காற்றில் கரையும் வரை
பசித்திருந்தான்...

தமிழினத்தின் 
ஒற்றை விடிவெள்ளியாய்
அத்தனை இனவாதத்தையும்
தன் ஒற்றை ஜீவனில் 
அடக்கும் முயற்சியில் 
பசித்திருந்தான் பார்த்தீபன்..
ஆம் அவன்
இனவிடுதலையை பசித்திருந்தான்..

தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுதங்கள்
பயங்கரவாதிகளென 
பகிரங்கப்படுத்தப்பட்ட போது,
தனி ஒருவனாய்
தமிழ் இனம் மீட்க
அகிம்சைக்குள் சரிந்தான் 
ஈழம் தளைக்க...
விதையென மண்ணில் 
வீழ்ந்தான்....

நல்லூர்க் கந்தன் வீதியிலே
மரணத்தை மலர்கள் தூவி வரவேற்க
தன் பசிப்பிணி மறந்த
தாய் தேசம் நினைந்த 
தனிப்பெரும் தவப்புதல்வனாய் 
யாழின் மருத்துவப் பீடத்து
மருந்தான போராளி அவன்...

மண்ணில் கடைசி தமிழன் 
உயிர் காற்றில் கலக்கும் வரை 
நம் நினைவுகளில் என்றும் 
அவன் உயிர்போடு தான்....

காகங்கள் கரைந்து
சாபங்கள் ஆனதில்லை வரலாறு
காலம் ஒருநாள் மாறும்
அன்று உலகநாடுகள் காணும் நம்மின வரலாறு..

தீயாக தீபத்திற்கு நம் சிரம் தாழ்த்திய 
வீரவணக்கங்கள்

சங்கரி சிவகணேசன்
Powered by Blogger.