பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து!!
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் 190 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர்.
அத்துடன் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமையும் பெய்ரூட்டில் களஞ்சியசாலையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்றும் பதிவானது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது பெய்ரூட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தானது அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தை கடந்து செல்லும் பிரதான வீதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் ஓவல் வடிவக் கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை