ஜனாதிபதி செயலணியில் யாழ் பல்கலை துணைவேந்தர்!
இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, 2020.03.31 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணிக்கு, அமைச்சுக்களுக்கும், இராஜாங்க அமைச்சுக்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களும் நேற்று முன்தினம் 22ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நியமனம் செய்யப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.




.jpeg
)





கருத்துகள் இல்லை