குதவாயில் கைபேசியை மறைத்து வைத்த கைதி! – வைத்தியசாலையில்

 

வெலிக்கடை சிறைச்சாலையின் விளக்கமறியல் கைதி ஒருவர் தனது குதவாயில் மறைத்து வைத்த கைபேசி சிக்கிக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முயற்சியால் குறித்த கைபேசி மீட்கப்படாத நிலையிலேயே அவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த நபர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் போது கைபேசியை குதவாயில் மறைத்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Blogger இயக்குவது.