வீதி ஒழுங்குகளை மீறிய 1000 பேர் சிக்கினர்!

 

கொழும்பில் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சாரதிகளை எதிர்வரும் சனிக்கிழமை பொலிஸ் மேலதிக படைத்திணைக்களத்துக்கு அழைத்து ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று முதல் பேருந்து முன்னுரிமை வீதிப்பகுதி அலுவலக போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பேருந்து முன்னுரிமை வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக பேருந்துகள் மற்றும் வேன்கள், மற்றும் பாடசாலை வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.