பிரபாகரன் சட்டகம் - நூல் வெளியீட்டு அழைப்பு 📸
தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின் கூட்டுச்சதியோடு சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பானது ஆழ்ந்த வேதனையையும் உளச்சோர்வையும் தந்து படுகுழிக்குள் தள்ளியது.
"நாம் தோற்றுப்போய்விட்டோம்" என்ற அவல மனநிலையுடன் தமிழர்கள் பதினொரு ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இன்னமும் அப்படியேதான் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் " நாம் தோற்றுப்போகவோ அன்றி அடிபணியவோ இல்லை" என்பதனையும், மீளெழும் வழிகளைக் கைக்கொள்ளும் நடைமுறை உதாரணங்கள் நம் கண்முன்னே விரிந்துகிடக்கின்றன என்பதையும், தமிழர்களது போராட்டத்தைத் தத்துவார்த்த / அறிவியலினூடாக அடையாளப்படுத்தும் முதல் நூலாகவும் வெளிவருகிறது "பிரபாகரன் சட்டகம்".
கனடா மெமோரியல் பல்கலைக்கழகத்தின் முதுகலைப்பட்டமும், அமெரிக்காவின் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்ற சிறப்புக்குரியவரான கலாநிதி.மு.சேதுராமலிங்கம் அவர்களின் ஆய்வாக வெளிவரும் இந்நூலை, நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி செப்பனிட்டுத் தொகுத்து, Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினூடாக வெளியிடுகிறார்கள்.
இதன் முதல் வெளியீடு எதிர்வரும் 03.10.2020 சனிக்கிழமை யேர்மனியின் Soest நகரில் நடைபெறுகிறது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுநாள் நிகழ்வில் வெளியிடப்படும் இந்நூல், தொடர்ச்சியாக ஏனைய நாடுகளிலும் வெளியிடப்படவிருக்கிறது.
தொடர்பு :
- நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி
- Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல்
கருத்துகள் இல்லை