அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரிடம் வாக்குமூலம்

 


இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அங்கொட லொக்கா என அறியப்படும் லசந்த சமிந்த பெரேராவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரிடம் மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்து விபரங்கள் குறித்த தகவல்களுக்காகவே அவர்களிடத்தில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சொத்துக்கள் பல காவற்துறையின் விசேட சுற்றிவளைப்புக்களின் ஊடாக கடந்த சில தினங்களாக கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதேநேரம் சந்தேகநபர் இந்தியாவில் உயிரிந்தார் என்பதனை நிரூபிப்பதற்கு அவரது உறவினர்களின் டீ.என்.ஏ மாதிரிகளை பெற்று இதற்கு முன்னர் இந்திய காவற்றையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.