கிழக்கில் படுகொலை செய்யப்பட்டோரின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!!
கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் குறித்த நினைவேந்தலில் நிகழ்வினை நடத்தின.
இதன்போது, பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்புபேராட்டத்திலும் வந்திருந்தவர்கள் ஈடுபட்டனர்
உறவுகள் மற்றும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் காணாமல்போனவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உக்கிரமடைந்த நிலையில், உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை