கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!!

 


உயிரைப் பணயம் வைத்து நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ள அவர், இலங்கை கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய பாதுகாப்புப் பிரிவினருககு நன்றி கூறியுள்ளார்.

இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பலில் கடந்த வியாழக்கிழமை காலை 8மணியளவில் தீ விபத்துக்கு உள்ளாகியது.

கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து தீப் பரவல் ஏற்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.

இதன்பலனாக, இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.