கொழும்பில் தமிழ் இளைஞர் கடத்தல்- வழக்கு ஒத்திவைப்பு!!

 


கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொருபேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை  நேற்று  புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது ஏற்கனவே இருந்த நீதிபதி மாற்றப்பட்டுப் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை வாசித்து அறிந்துகொள்ள தனக்குக் கால அவகாசம் தேவையெக் கூறிய  சிங்கள  நீதிபதி பிரியந்த லியனகே விசாரணையை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் தெகிவளை ஆகிய பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

பேரினவாத இலங்கைப் படையினரே காரணம் அன்று உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.  ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படையைச் சேர்ந்த   இனப்படுகொலையாளி  வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிலுள்ள அதிகாரிகள் என 16 சந்தேகநபர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.


இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லெப்டின்ன கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிய குற்றச்சாட்டு,

பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாகப் பதவி வகித்திருந்த முன்னாள் கடற்படை தளபதியான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சுமத்தப்பட்டிருந்தது.


இதேவேளை, இந்த வழக்கு விசாரணை தொடர்பான செய்திகளைச் சேகரிக்க ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு வருவது வழமை.

ஆனால்  இனப்படுகொலையாளி   கோத்தா பதவியேற்ற பின்னர்  வழக்கு விசாரணை குறித்த செய்திகளைச் சேகரிக்க ஊடகவியலாளர்கள் வருவதில்லையென நீதிமன்றத் தகவல்கள் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.