பச்சிளம் குழந்தையை உயிருடன் கொழுத்திய தாயும் பேத்தியாரும்!!

 


தமிழகத்தின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் பச்சிளம் குழந்தையை எரித்துக் கொன்றமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகள் சங்கரகோமதிக்கு (22) பிறந்த குழந்தை என்பது தெரியவந்ததை அடுத்து திருமணமாகாத குறித்த பெண்ணையும், பெண்ணின் காதலனையும் பொலிசார் கைது செய்தனர்.


சங்கரகோமதி திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்ததால், அவமானமாக கருதிய குடும்பத்தினர், குழந்தையை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி பச்சிளம் குழந்தையை சங்கரகோமதி, அவருடைய தாயார் இந்திராணி (45) ஆகிய 2 பேரும் சேர்ந்து, அருகில் உள்ள தனியார் தியேட்டர் வளாகத்துக்கு கொண்டு சென்று, தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.


இதுதொடர்பாக கைதான சங்கரகோமதி வாக்குமூலம் அளிக்கையில்,


என்னுடைய தந்தை சண்முகவேல் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நான் சங்கரன்கோவிலில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்தேன். அப்போது எனக்கும், கூலி தொழிலாளியான சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதில் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து சங்கரிடம் தெரிவித்தேன். அப்போது சங்கர், நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.


இதுகுறித்து என்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனை குடும்பத்தினர் அவமானமாக கருதியதால், வீட்டை காலி செய்து விட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் சங்குபுரம் 6-வது தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்து வந்தோம்.


இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு எனக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்த நிலையில் அக் குழந்தையை கொலை செய்வதற்கு திட்டமிட்டோம்.


அதன்படி வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர், அதிகாலையில் தாயார் இந்திராணியுடன் அருகில் உள்ள தனியார் தியேட்டர் வளாகத்துக்கு சென்றேன். அங்கு மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.


கைதான சங்கரகோமதி, இந்திராணி, சங்கர் ஆகிய 3 பேரையும் சங்கரன்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்திய பின்னர் சங்கரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இந்திராணியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.


மேலும் சங்கரகோமதிக்கு குழந்தை பிறந்து சில நாட்களே ஆவதால், அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.