தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்-யேர்மனி!

இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணா நோன்பினை ஆரம்பித்து. பன்னிரெண்டு நாட்களின்
பின் உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் அரசியல் விளிப்புணர்வை புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் இளையவர் மனங்களில்
நிலைநிறுத்தும் முகமாகவும். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோயான கொரோனா வைரஸ் தாக்கத்தின்
எதிரொலியாக யேர்மனியில் மண்டபங்களில் மக்கள் கூடி நிகழ்வுகளை பெரிய அளவில் நடாத்துவதற்கு தவிர்க்கப்பட்டுள்ள நிலையில்ரூபவ் யேர்மனியில் உள்ள பன்னிரெண்டு நகரங்களைத் தெரிவுசெய்து நகரமத்தியில் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக தியாக தீபம்
லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு மலர் தூவி விளக்கேற்றி வணங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழ் இளையோர் அமைப்பினராலும் யேர்மனி மக்களவையினராலும்
முன்னெடுக்கப்படுகின்றது. 15.9.2020 செவ்வாய்க்கிழமை யேர்மனி முன்சன் நகரத்தில் ஆரம்பித்து 26.9.2020
சனிக்கிழமை யேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரத்தில் உள்ள பரிசப் பிளற்ஸ்; என்னும் இடத்தில் அடையாள உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப்பட்டு
நிறைவடைய இருக்கின்றது. München.Stuttgart,Mönchengladbach,Frankfurt am Main,Düsseldorf,Wuppertal Barmen.Münster, Göttingen,Bremen,Hamburg/Krefeld,Essen,Berlin ஆகிய நகரங்களின் மத்தியில் நடைபெறும் இவ் வணக்க நிகழ்வுகளில் திலீபன் சம்பந்தமான கண்காட்சிகளும்
யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் யேர்மனிய மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந் நகரங்களில் வாழும் தமிழ்மக்கள் அவ் இடத்திற்குச் சென்று லெப். கேணல் திலீபன்
அவர்களுக்கு மலர் தூவி விளக்கேற்றி வணக்கம் செலுத்துமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை