இஸ்ரேலை அங்கீகரிக்க பஹ்ரைன் அரசு சம்மதம்!!

 


மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனாக, இஸ்ரேலை அங்கீகரிக்கவும், இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்கவும் பஹ்ரைன் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஆகியோருடன் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பேசியதை அடுத்து, இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்கா, பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் 19 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ‘ஒரு வரலாற்று முன்னேற்றம்’ என்று ட்ரம்ப் பாராட்டினார்.

ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எட்டிய முதல் வளைகுடா அரபு நாடாக மாறிய ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.

எகிப்து, ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிறகு இஸ்ரேலுடன் அத்தகைய ஒப்பந்தத்தை எட்டிய நான்காவது அரபு நாடு பஹ்ரைன் ஆகும்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம் மற்றும் முழு உறவு ஏற்படுவதை குறிக்கும் வகையில் ஒரு வாராத்திற்கு பிறகு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்ய உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதுடன், இஸ்ரேல் பிரதமருடன் தனியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.