யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம்🎦📸
யாழ். பல்கலைக்கழக முன்றலில் கூடி நின்ற சில மாணவர்கள் திலீபனின் நினைவேந்தலுக்கு தான் ஆயர்த்தமாகின்றனர் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் குவிந்தனர். இதற்கிடையில் கடமையில் நின்ற இராணுவ வீரர் துப்பாக்கியை இயக்குவதற்கான ஆயர்த்தம் செய்ததாகவும் சிவில் உடையில் நின்ற சிலர் ஆபாச வார்த்தைப்பிரயோகம் தம்மை நோக்கி மேற்கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். பொலிஸார் குவிக்கப்படும் தகவல் அறிந்து மாணளவர்களும் குவிந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் சில மணி நேரம் தர்க்கம் ஏற்ப்பட்டது. தொடர்ந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸாரும் பொலிஸாரை கலைந்து செல்லுமாறு மாணவர்களும் வாதப்பிரதிவாதம் செய்துகொண்டனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் யாழ். பல்கைலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு செவி சாய்த்து மாணவர்கள் கலைந்தனர். பொலிஸார் அவ்விடம் விட்டு அகன்றனர்.
கருத்துகள் இல்லை