பிரேமலாலுக்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று(07) அனுமதியளித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சுக்கு அண்மையில் அறிவித்திருந்த நிலையில் இதனை எதிர்த்து இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தனக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு கோரி ரீட் மனு ஒன்றினை கடந்த 04ம் திகதி தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை