இரட்டை குடியுரிமை கொண்டவர், பாராளுமன்ற உறுப்பினராகுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரச உயர் பதவிகளை வகிப்பதால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் ஊடாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இரட்டை குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை நீக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
இரட்டை குடியுரிமை கொண்டவர் பாராளுமன்ற உறுப்பினராகுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,கிராமிய கலை மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இரட்டை குடியுரிமை கொண்டவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட தடை அரசியலமைப்பின் 20வது திருத்த மூல வரைபில் நீக்கப்ட்டமை எதிர்ப்புக்குரியது.
20வது திருத்தத்தில் பல விடயங்கள் சாதகமாக காணப்பட்டாலும். இரட்டை குடியுரிமை உள்ளவருக்கு சாதகமாக ஏற்பாடுகள் ஏற்படுத்தியுள்ளமை தவறான தீர்மானமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை